முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் 27771 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன் ,எஸ்.வளர்மதி வழங்கினர்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் நேற்று (04.02.2017) பள்ளி கல்வித்துறையின் சார்பில் 27771 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்கள்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் முன்னிலை வகித்தார்.

 

மிதிவண்டிகள்

 

சுற்றுலாத்துறை அமைச்சர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் பெண்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002 ஆம் கல்வி ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005-2006ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அனைத்து பிரிவு மாணவ, மாணவியர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி 2016-17ஆம் கல்வி ஆண்டில் ரூபாய் 243 கோடியே 96 இலட்சம் செலவில்; 2,70,417 மாணவர் மற்றும் 3,48,865 மாணவியர்கள் என மொத்தம் 6,19,282 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.01.2017 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் 186 மாணவர்களுக்கும், ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 468 மாணவியர்களுக்கும், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 540 மாணவர்களுக்கும், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 245 மாணவர்களுக்கும், ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 401 மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 1840 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

தன்னம்பிக்கை

 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:

கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் பிள்ளைகளை 10ம் வகுப்பு முடித்தபின் தொடர்ந்து மேல்நிலைக்கல்வி பயில அனுப்பாமல் நிறுத்துவது ஏன் என்று ஆய்வு செய்து தங்கள் கிராமங்களில் இருந்து மேல்நிலைப்பள்ளிக் கூடங்களுக்கு எவ்வித சிரமமின்றி மாணவச் செல்வங்கள் சென்று வரவும், தன்னம்பிக்கையை மனதில் விதைக்கவும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2001 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் மாணவச்செல்வங்கள், குறிப்பாக பெண்குழந்தைகள் மிகுந்த ஊக்கம் பெற்று அம்மா வழங்கிய மிதிவண்டிகளில் பள்ளி சென்றுவருவதுடன் இந்த உலகில் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கல்வி பயின்று வெற்றி பெற்று வருகிறார்கள்.

அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 58063 மாணவர்களுக்கும் 75434 மாணவியர்களுக்கும் என மொத்தம் 1,33,497 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அதேபோல் நடப்பாண்டும் 27771 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் கணேஷ்குமார் (திருச்சி), ஏ.ஜி.ராஜராஜன் (ஸ்ரீரங்கம்), மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் முத்துவடிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, அமராவதி கூட்டுறவு வங்கித்தலைவர் பத்மநாதன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், வட்டாட்சியர்கள் ரெங்கராஜன், சத்தியமூர்த்தி, சண்முகராஜசேகரன், முன்னாள் மாநகராட்சி மேயர் அ.ஜெயா, முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், முன்னாள் கோட்டத்தலைவர் மனோகரன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் அழகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மலைக்கோட்டை ஐயப்பன், கார்த்திக்கேயன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்