முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டேரி பகுதியில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண் கைது.

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      சென்னை

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா என்ற போதை புகையிலை பொருட்கள், இதர புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை தயாரிப்பவர்கள், பதுக்கி வைத்து சப்ளை செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஜார்ஜ்,உத்தரவிட்டார். அதன் பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணித்து, மேற்படி தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மற்றும் தயாரிப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக,  ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, சந்தேகத்தின்பேரில், எண்.36, கோவர்தன் தெரு, ஓட்டேரி என்ற முகவரியிலுள்ள கடையை ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.   அதன்பேரில், ஹான்ஸ் மற்றும் பான் மசாலா விற்பனை செய்த சந்திராதேவி (43), மேட்டுப்பாளையம், ஓட்டேரி என்பவரை கைது செய்தனர். அவரது கடையிலிருந்து ஹான்ஸ் -13 பாக்கெட்டுகள் , சபாரி பான் மசாலா -10 பாக்கெட்டுகள் மற்றும் கூல்ஸ் -15 பாக்கெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்