முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்தாண்டு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல் முயற்சி அதிகம்: ராஜ்யசபையில் தகவல்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கடந்த 3 ஆண்டுகளில் 2016-ம் ஆண்டுதான் பாகிஸ்தானில் இருந்து ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகம் என்று ராஜ்யசபையில் மத்திய அரசு தெரிவித்தது.
பாராளுமன்ற ராஜ்யசபையில் நேற்று  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மத்திய உள்துறை  இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் தெரிவித்தார்.

தினமும் ஊடுறுவல்:

இதுதொடர்பாக அமைச்சர் ஹன்ஸ்ராஜ் மேலும் கூறியதாவது:-

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் கடந்த 3 ஆண்டுகளில் கடந்தாண்டுதான் ராணுவமும் தீவிரவாதிகளும் அதிகமாக ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டனர். தினமும் குறைந்தது ஒரு தடவையாவது இந்த ஊடுருவல் முயற்சி நடந்தது. கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 364 தடவைகள் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு 222 தடவைகளும் 2015-ம் ஆண்டு 121 தடவைகள் ஊடுருவல் முயற்சிகள் நடந்தன.

பலப்படுத்துதல்:

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவல் முயற்சியை தடுக்க மாநிலத்தின் ஒத்துழைப்புடன் எல்லைக்கோடு நெடுகிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஹகீர் கூறினார். ஆனால் அவர் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளும் ராணுவத்தினரும் எத்தனை தடவை ஊடுருவினார்கள் என்பதை ஹகீர் கூறவில்லை.
இந்தியா-பாகிஸ்தான்,இந்தியா-வங்கதேச எல்லையில் ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட கேள்விக்கு மற்றொரு இணை அமைச்சர் கிரண் ரிச்சு பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்