முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் சார்பில் கிராம தூய்மை பணி

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

  போடி, -தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் கிராம தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

போடியில் உள்ள ஸ்பைஸ் வேலி கல்வியியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராம தூய்மை பணித் திட்ட முகாம் போடி சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் கல்லூரி முதல்வர் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது. சில்லமரத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கல்லூரியில் பயிலும் பயிற்சி ஆசிரிய, ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற வளாகம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினார். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த புதர் செடிகளையும் வெட்டி அப்புறப்படுத்தினர்.

ஸ்பைஸ் வேலி கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்கள் ஜெனிபர், அமுதா, பிரியா, ஜான்சிராணி ஆகியோர் தூய்மை பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தினர். ஊராட்சி மன்ற செயலர் மணிகண்டன் நன்றி கூறினார். கல்வியியல் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்களை கிராம மக்கள் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்