கோவில்பட்டியில் இலக்கிய உலாவின் பௌர்ணமி நூல்வலம்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று ஏதேனும் ஒரு தமிழ் நூல் பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதும் சிறப்பாக பணியாற்றும் ஒருவரது ஒருவரது பணிச்சிறப்பிற்காக பாராட்டி மகிழ்வதும் மாணவ மாணவியரின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் நூல்களை வழங்கி மகிழ்வதும் வழக்கம்

          இம்மாத பௌர்ணமி நூல் வலம் நிகழ்வு புனிதஓம் கான்வெனட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. புனிதஒம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். சன்வெட்ஸ் கார்ட்ஸ் ஹனிபா, இந்திய சோவியத் நடபுறவு கலாச்சார மாநிலச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய உலா ரவீந்தர் வரவேற்றார்.          சிறார் இலக்கிய நூலாசிரியர் உதய சங்கர் எழுதிய மாயக்கண்ணாடி என்ற நூல் பற்றிய கருத்துக்களை தேசிய நல்லாசிரியர் விநாய சுந்தரி, நல்லாசிரியர் உலக நாதன், இலக்கிய குரிசல் ராஜாமணி, பி.எஸ்.என்.எல் இளநிலை பொறியாளர் சவரிராஜ் ஆகியோர் பதிவு செய்தனர். பணிச்சிறப்பு பாரட்டு பெற்ற கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை  மருந்தாளுனர் சி.பாலசுப்பிரமணியன் அவர்களை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை கெங்கம்மாள் அவைக்கு அறிமுகம் செய்தார். அன்னாருக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அபிராமி முருகன்  பரிசளித்து பாராட்டினார். ஆசிரியை அமலபுஷ்பம் விழிப்புணர்வு பாடல்களை பாடினார்.           சிறப்பான பங்களிப்பிற்காக காமராஜ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, இலக்குமி ஆலை துவக்கப்பள்ளி மேற்கு, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேஷன்;பள்ளி, ஆகிய பள்ளிகளுக்கு இலக்கிய உலா சார்பில் கேடயங்கள் வழங்கப்பட்டன.           சன் வெட்ஸ் கார்டின் அழகான கையெழுத்துக்கு அருமையான நூல் என்ற கையெழுத்து பயிற்சி முகாமில் சிறப்பிடம் பெற்ற 32 பள்ளிகளை சார்ந்த 156 மாணவ மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற முதல்வர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை அட்வகேட் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் இலக்கிய உலா இயக்குநர்கள் டாக்டர் அபிநயா, ஆர்.பிரபாகரன், நவநீதகிருஷ்ணன், வினோபா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: