உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்: ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சலுகைகளுடனான அடங்கிய தேர்தல் அறிக்கை

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      அரசியல்
rahul   akhilesh(N)

லக்னோ  - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச வீடு, சைக்கிள், செல்போன் வழங்கப்படும் என்று ராகுல்காந்தியும், அகிலேஷ் யாதவும் நேற்று கூட்டாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் அறிக்கை
உத்தரபிரதேச சட்ட சபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இங்கு சமாஜ்வாடி கட்சியும், காங்கிரசும் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. இன்னும் அங்கு 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இந்தநிலையில் நேற்று மாநில தலைநகர் லக்னோவில் கூட்டணி கட்சி சார்பாக தேர்தல் பேரணி நடைபெற்றது. அந்த பேரணிக்கு பின்னர்  காங்கிரஸ் - சமாஜ் வாடி கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி , சமாஜ் வாடி கட்சி தலைவரும் முதல்வருமான அகிலேஷ் யாதவ் நேற்று லக்னோவில் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து மக்களுக்கு 10 உறுதிமொழிகளை அளித்துள்ளனர். மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளில் 300-ல் வெற்றிபெறும் நோக்கத்தில் இந்த தேர்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த 10 உறுதிமொழிகளையும் நிறைவேற்றப்படும் என்று அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

ஸ்மார்ட் போன்
அதில் இரு கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் இலவசமாக வழங்கப்படும். 20 லட்சம் இளைஞர்களுக்கு திறைமையை வளர்த்து அவர்களுக்கு வேலைவாய்பு வழங்கப்படும். விவசாய கடன் ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை - மின்சார வசதி
கிராமப்புற ஏழைகள் சுமார்  ஒரு கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 இலவசமாக வழங்கப்படும். நகர்புற ஏழைகளுக்கு தினமும் ஒரு வேளை சாப்பாட்டிற்கு ரூ.10 வழங்கப்படும். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 32 சதவீதம் ஒதுக்கப்படும். ஊராட்சி நிர்வாகத்தில் 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படும். இன்னும் 5 ஆண்டுகளில் எல்லாகிராமங்களுக்கும் சாலை வசதி மற்றும் மின்சார வசதி செய்துகொடுக்கப்படும்.

இலவச சைக்கிள்
10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும். தலித்கள் மற்றும் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும். எல்லா மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். மாநிலத்தில் உள்ள 6 பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் விடப்படும். நலத்திட்டங்களில் சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு அவர்களின் விகிதாசாரத்தின்படி நலத்திட்டங்களில் பகிர்ந்து அளிக்கப்படும். மாநிலத்தில் காவல்துறையை நவீனப்படுத்தப்படும் டயல் 100 திட்டத்தை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மேலும் ஏழைகளுக்கு இலவச வீடுகள்,  திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு பின் அகிலேஷ் தெரிவிக்கையில்.,
உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. ஓட்டுப்பதிவின் தொடக்கமே எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஓட்டுப் பதிவில் முதல் ஓட்டு எங்கள் கூட்டணிக்கு தான் விழுந்து இருக்கிறது. எனவே எங்கள் அணிதான் முன்னிலை வகிக்கும் என்பது தெரிய வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான தேர்தல். இதில் உணர்ச்சி களுக்கோ, கோபங்களுக்கோ இடம் அளிக்க கூடாது.என்று அவர் கூறினார்.ராகுல்காந்தி கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் இளை ஞர்கள் நலன் மற்றும் தொலை நோக்குப்பார்வை அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கான அடித்தளம் அமைப்பதாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: