முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடை மறித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

பாலசூர் : எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரிசோதனை வெற்றி

இந்திய விஞ்ஞானிகள் ராணுவத்துக்காக பல ஏவுகணைகளை தயாரித்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். எதிரிகளின் ஆயுதங்களை இடை மறித்து தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை நேற்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று காலை 7.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு  மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் பாராட்டு

இந்த இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, இந்த ஏவுகணை சோதனை வெற்றியை எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கவும் பயன்படுத்தினார்.  பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படையினர் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தியதை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சர்ஜ்ஜிக்கல் அட்டாக் குறித்து சந்தேகம் எழுப்பிய எதிர்க்கட்சிகள் இந்த ஏவுகணையானது பூமிக்கு மேல் சுமார் 50 கிலோ மீட்டர் மேலே சென்று எதிரிகளின் ஏவுகணையை வழிமறித்து தாக்கக்கூடிய வல்லமை படைத்ததாகும். அதனால் எதிர்க்கட்சியினர் இந்த 50 கிலோ மீட்டருக்கு மேலே பறந்து அதை பார்க்கலாம் என்று மோடி கூறினார்.

இந்த ஏவுகணையானது பூமியின் வலிமண்டலத்திற்கு மேல் 50 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேல் பறந்து சென்று தாக்க வல்லதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்