கோவில்பட்டி ஆனந்த முனீஸ்வரர் கோவிலில் கொடை விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

கோவில்பட்டி பாரதிநகர் (ஓடைத்தெரு) 4வது தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த முனீஸ்வரர் திருக்கோவிலில் முதலாமாண்டு கொடை விழா வெள்ளிக் கிழமை வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு செண்பகவல்லியம்மன் கோவில் தெப்பத்து பிள்ளையார் கோவிலில் இருந்து 50 மேற்பட்ட பால்குட ஊர்வலம் தெற்கு பஜார், மாதாங்கோவில்தெரு,மந்தித் தோப்பு வழியாக கோவில் வளாகத்தை வந்து அடைந்தது. தொடர்ந்து நான்முக விநாயகர், ஆனந்த முனீஸ்வரர், வீரகாளியம்மன், முத்துமாரியம்மன், நாகேஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி, பைரவர், பலபீடம் மகா அபிஷேகமும், அலங்கார தீபாரதனை நடைப்பெற்றது. மாலை வடக்குத்தியம்மன் வழி அனுப்புதல் அக்கினி சட்டி ஊர்விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு இரவு 12 மணிக்கு சாமக்கொடை சிறப்பு பூஜைநடைபெற்றது. மறுநாள் சனிக்கிழமை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முளப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பூஜைகளை கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரி புற்றுக்கோவில் அர்ச்சகர் சுப்பிரமணியன் செல்வ சுப்பிரமணி முத்துமணி சங்கர் குழுவினர் செய்தனர் விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சாமியாடிகள் ஊர் பொதுமக்கள் மற்றும் சிதம்பரம்இ மோகன்இ பேராச்சிஇ ராமசந்திரன்இ செல்வம்இ ராமர்இ கண்ணன்இ வள்ளிராஜ்இபேராச்சிபாலாஇ மணிகன்டன்இ செந்தில்இ ராஜாஇ சங்கர்இ முனியசாமிஇ மாரிமுத்துஇ மகேந்திரன் முருகன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: