முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி விமான நிலையத்தில் பரவிய நச்சு வாயுவால் முச்சு திணறல் : பயணிகள் உடனே வெளியேற்றம்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பெர்லின்  - ஜெர்மனி விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனையால் 50 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

நச்சு வாசனை
ஜெர்மனியில் ஹாம்பர்க் நகரில் விமான நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு ஏர்கண்டிசன் சிஸ்டத்தில் திடீரென ஒருவித நச்சு வாசனை வெளியானது. பின்னர் அது படிப்படியாக விமான நிலையம் முழுவதும் பரவியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் வெளியேற்றம்
உடனே விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு பல மணி நேரம் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. புறப்பட தயாராக இருந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

50 பேருக்கு மூச்சு திணறல்
நச்சு வாசனை பரவியதால் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 50 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களுக்கு கண் எரிச்சலும் உருவானது. எனவே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நச்சு வாசனை பரவியதை தடுத்து நிறுத்தி சீரமைத்தனர். அதைத் தொடர்ந்து மீண்டும் விமான நிலையம் செயல்பட தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்