முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர் தலைமையில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தொடர்பான வழிக்காட்டுதல் குழுக்கூட்டம்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அறிவுத்ததின்படியும் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தொடர்பான வழிக்காட்டுதல் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

  விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.வி.சாலோடீசன் அவர்கள் உணவு பாதுகாப்புத் தரநிர்ணயச் சட்டம்-2006 விதிமுறைகள், உணவு பொருட்கள் கலப்படம் பற்றியும் அதனால் விளையும் நன்மை; தீமைகள் பற்றியும், உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்-2006-ன்படி உணவுப்பொருள்கள் விற்பனை, தயாரிப்பு, சத்துஉணவுக்கூடங்கள், குடிஉரிமைப்பொருள் அங்காடிகள், பள்ளி,கல்லூரிகள் உரிமம் டுiஉநளெநஃபதிவு சுநபளைவசயவழைn, பெறவேண்டும். அனைத்து நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் ஆடு, மாடு வதைச் செய்வது அங்கீகரிக்கப்பட்ட வதைச் செய்யுமிடங்களில் மட்டுமே வதைச்செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

    அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளையும் நல்ல தரமான உணவுகளை கையாள வேண்டும் என்றும் எப்படி  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தரமான உணவுகளையே பொதுமக்கள் பயன்பெற அறிவுரை செய்ய வேண்டும். பாலிதீன் பைகளை தவிர்க்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

     இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மரு.வி.சாலோடீசன், துணைஇயக்குநர் சுகாதாரப் பணிகள்,அனைத்து நகராட்சி ஆணையாளர்கள்,பஞ்சாயத்து உதவி இயக்குநர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், நுகர்வோர் பாதுகாப்பு தலைவர், ஹோட்டல் சங்க உரிமையாளரின் தலைவர், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்