முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கான காசோலைகள் :கலெக்டர் கே. விவேகானந்தன், வழங்கினார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (13.02.2017) கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது.பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக மேல்நிலைத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளை கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, மின் வசதி, பட்டா வேண்டுதல், கல்வி உதவி தொகை, தரைமட்ட பாலம், மூன்று சக்கர வண்டி, ஓய்வூதிய தொகை, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் என மொத்தம் 311 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உடனடி தீர்வு காண வேண்டுமென அறிவுறுத்தினார். முன்னதாக உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி தலா ரூ. 8,000ஃ- வீதம் 5 நபருக்கும், இறப்பு மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரண தொகையாக தலா ரூ. 12,500ஃ- 16 நபருக்கும என மொத்தம் 21 பனாளிகளுக்கு ரூ. 2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாப்பாத்தியம்மாள், தனி துணை ஆட்சியாகள்;; (கலால்) மல்லிகா, (ச.பா.தி) குப்புசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலாஹிஜான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமலாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்