முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணி:கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வறட்சி நிவாரண கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு ஆவணங்களை பதிவுசெய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு இக்கணக்கெடுப்பு விவரங்களைக் கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சரியான விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் நேற்று (14.02.2017) நேரில் பார்வையிட்டு மேலாய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம், மானத்தி கிராமம், கூத்தம்பூண்டி, 67-கவுண்டம்பாளையம், மண்டகப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு சரிபார்ப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் மேலாய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மாணிக்கம்பாளையம், மானத்தி கிராமத்தில் வீரக்குமார் என்பவரின் மகன்கள்; திரு.சதாசிவம், திரு.தர்மசிவம் ஆகியோர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் முற்றிலும் காய்ந்துவிட்டதையும், திரு.ராஜு என்பவரின் மனைவி திருமதி.முத்தம்மாள் மற்றும் நல்லதம்பி என்பவரின் மனைவி திருமதி.சரஸ்வதி ஆகியோர் சாகுபடி செய்திருந்த நிலக்கடலை பயிர்கள் முற்றிலும் காய்ந்து விட்டதையும், செல்லப்பகவுண்டர் என்பவரின் மகன்கள் திரு.செங்கோடன், திரு.நெல்லையன் ஆகியோர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் முற்றிலும் காய்ந்துவிட்டதையும், கூத்தம்பூண்டியில் திரு.குருசாமி என்பவரின் மகன் திரு.அசோகன் என்பவர் சாகுபடி செய்திருந்த துவரை மற்றும் ஊடுபயிராக சாகுபடி செய்திருந்த கொள்ளு ஆகிய பயிர்கள் வறட்சியால் காய்ந்து விட்டதையும், 67- கவுண்டம்பாளையத்தை சேர்ந்த திரு.ரங்கசாமிக்கவுண்டரின் மகன் திரு.மாணிக்கம், திரு.சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு.செந்தில் ஆகியோர் சாகுபடி செய்திருந்த கடலை மற்றும் ஆமணக்கு பயிர்கள் வறட்சியால் காய்ந்து விட்டதையும், மண்டகப்பாளையத்தில் திரு.பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு.செங்கோட்டுவேல் மகள்கள் திருமதி.சுசீலாதேவி மற்றும் திருமதி.மீனாட்சி ஆகியோர் சாகுபடி செய்திருந்த நிலக்கடலை, சோளம் ஆகிய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு காய்ந்து விட்டதையும் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்திருந்து பயிர்கள் வறட்சியால் காய்ந்துவிட்டதை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று தல ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவாய்த்துறையினர் பதிவு செய்து வரும் பணிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு தல ஆய்வு மேற்கொண்டு பணிகளை மேலாய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு வருவாய் வட்டாச்சியர் திரு.இரா.தமிழ்மணி, உட்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்