நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017      நாமக்கல்
3

நாமக்கல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களின் வறட்சி பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் வறட்சி நிவாரண கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு ஆவணங்களை விவரங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இக்கணக்கெடுப்பு விவரங்களைக் கொண்டு வருவாய்த்துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சரியான விவரங்களை பதிவு செய்து வருகின்றனர். குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு மேலாய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையம், குமாரபாளையம் அம்மானி கிராமம், கல்லங்காட்டு வலசு, வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், சமயசங்கிலி, பந்தல்கால் மேடு, காடச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு சரிபார்ப்பு பணிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் மேலாய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லக்காபாளையம் கிராமத்தில் பெருமாள் என்பவரின் மகன்கள் வெங்கடாசலம், இராமசாமி, செங்கோட கவுண்டர் மனைவி பெருமாயி ஆகியோர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து விட்டதையும், குமாரபாளையம் அம்மானி கிராமம், நேரு நகரில் செங்கோட கவுண்டர் என்பவரின் மகன் சீரங்க கவுண்டர் என்பவர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் மற்றும் நிலக்கடலை பயிர்கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து விட்டதையும், கல்லாங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த இரத்தினலால் நகத் என்பவரின் மகன் ராஜேந்திரகுமார் நகத் என்பவர் என்பவர் சாகுபடி செய்திருந்த துவரை, கடலை ஆகிய பயிர்கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து விட்டதையும், வீரப்பம்பாளையம் நல்லாம்பாளையத்தில் காளியண்ணக்கவுண்டர் மகன் தங்கவேல் என்பவரும், சுப்பிரணமணி என்பவரின் மனைவி ராசம்மாள் ஆகியோர் என்பவர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள், நரிப்பயிர்;கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து விட்டதையும், சமயசங்கிலி கிராமத்திற்குட்பட்ட குப்பாண்டாபாளையம், பந்தல்காடு மேடு ஆகிய பகுதியைச் சேர்ந்த கே.எம்.செல்லமுத்து என்பவரின் மனைவி எஸ்.பர்வதம் என்பவர் என்பவர் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து விட்டதையும், பள்ளிபாளையம், காடச்சநல்லூர் கிராமத்திற்குட்பட்ட செல்லமுத்து என்பவரின் மகன் கந்தசாமி, பங்கஜம், ராமசாமி, பாலமுருகன், பாவாயி மணி ஆகியோர் சாகுபடி செய்திருந்த சோளப்பயிர்கள் வறட்சியால் முற்றிலும் காய்ந்து பாதிக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று தல ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவாய்த்துறையினர் பதிவு செய்து வரும் பணிகளை இன்று கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு தல ஆய்வு மேற்கொண்டு பணிகளை மேலாய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்ஷினி, குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், பள்ளிபாளையம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பி.அசோக்குமார் உட்பட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் உடனிருந்தனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: