முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி : பாதுகாப்பு பலமடங்கு அதிகரிப்பு

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாகிஸ்தான் எல்லையில் இருந்து 100 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து இந்திய தரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊடுருவ பாக். உதவி
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் லஸ்கர்-இ-தொய்பா மற்றும் பல்வேறு இயக்க தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

புலனாய்வு தகவல்
இந்த நிலையில் பாகிஸ்தான் எல்லையில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு தயாராக இருப்பதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் உரிய ஏற்பாடுகளை செய்தபடி உள்ளனர். எல்லையில் அடிக்கடி ஆள் இல்லா விமானங்களை பறக்கவிட்டு அங்குள்ள நிலைமைகளை முற்றிலும் கண்காணிக்கிறார்கள்.

உஷார் நிலையில்..
எனவே, தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க இந்திய பாதுகாப்பு படையும், ராணுவமும் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அனைத்து இடங்களிலும் வீரர்கள் ரோந்து சுற்றி வருகிறார்கள். இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் கே.கே. சர்மா கூறியதாவது:-

மீறி தாக்குதல்
இந்தியா நடத்திய சர்ஜிகல் ஆபரே‌ஷனுக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தானின் அச்சுறுத்தல் அதிகமாகவே இருக்கிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் எல்லைகளில் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். தற்போது பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது நின்று இருக்கிறது. ஆனாலும், அவர்கள் அத்துமீறல்கள் நீடிக்கிறது. அடிக்கடி ஆள் இல்லா விமானங்கள் மூலம் வேவு பார்க்கிறார்கள். இதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எந்த எதிர்தாக்குதலுக்கும் தயாராகவே இருக்கிறோம். நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்