முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி.- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு,

மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். தேனி-அல்லிநகரத்தைச் சேர்ந்த காமாட்சி அவர்களின் மகன் ஓவுல்ராஜ் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சக்கர நாற்காலி வேண்டி இன்று (20.02.2017) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தார். மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதி வாய்ந்த மனுதாரர் என்பதனை உரிய விசாரணை மேற்கொள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தகுதி வாய்ந்த மனுதாரர் எனக் கண்டறியப்பட்டபின் மனு அளித்த இன்றே மாற்றுத்திறனாளியான ஓவுல்ராஜ் அவர்களுக்கு சக்கர நாற்காலியினையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து வறுமை நிலையில் உள்ள குடும்பத்தில் பேறுகால சிகிச்சையின் போது தாய் காலமானபடியால் பிறந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10,000ஃ- வீதம் இரண்டு குழந்தைகளுக்கு ரூ.20,000ஃ-த்திற்கான காசோலையினையும், புது வாழ்வு திட்டத்தின் சார்பில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று 8 மகளிர்களுக்கு ஓட்டுநர் உரிமத்திற்கான அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன்தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தாமஸ்பிரிட்டோமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலிஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரிசெய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல்உதவி இயக்குநர் (கனிமம்) சாம்பசிவம்மாவட்ட தாட்கோ மேலாளர் தங்கவேல்மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதி ராமலிங்கம்புது வாழ்வுத்திட்ட பொது மேலாளர் கழுகாசலமூhத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்