முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் கையெழுத்திட்ட 5 முக்கிய திட்டங்களை சேலம் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்:கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றவுடன் 20.02.2017 அன்று கையெழுத்திட்ட 5 முக்கிய மக்கள் நலதிட்டங்களை சேலம் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது. தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றதை தொடர்ந்து மகளிர், பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் அம்மா இரு சக்கர வாகனம் திட்டம், ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவியினை 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் திட்டம், மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் திட்டம், 500 மதுபானக் கடைகள் மூடும் திட்டம் என 5 முக்கிய கோப்புகளில் தமிழ்நாடு முதலமைச்சர் கையொப்பம் இட்டுள்ளார்கள். அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்படும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி வங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மீனவர்களுக்கென தனியே வீடு கட்டும் திட்டத்திற்காக மீன்வளத்துறையில் சேலம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குறித்த விவரத்தினையும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் டாஸ்மார்க் கடைகள் துறைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலம் வழங்கப்படவுள்ள அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பூங்கொடி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமசந்திரன், உதவி ஆணையர் (கலால்) குமரேஷ்வரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் தொடர்புடைய அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்