முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலந்தலப்பட்டி கிராம சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.17.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி வருவாய் கிராமத்திற்குட்பட்ட எலந்தலப்பட்டியில் நேற்று (22.02.2017) மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தலைமையில் நடைபெற்றது.

 

சிறுபான்மையினர்

 

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், மக்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற இதுபோன்ற முகாம்களை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடத்தி, உரிய பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் முழுவதும் எலந்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, அரசு அலுவலர்கள் அனைவரும் தங்களது துறை சார்ந்த மக்கள் நலத் திட்டங்களுக்குரிய பயனாளிகள் இனம் கண்டறிந்து, அதன் மூலம் நேற்று (22.02.2017) பல்வேறு துறைகளின் சார்பில் 57 பயனாளிகளுக்கு 17,69,875- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக மாநில அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகளை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை மூலம் நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, முதலமைச்சரின் சமூக பாதுகாப்பி திட்டத்தின் கீழு; திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை, விபத்து நிவாரணம் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற திட்டங்களின் கீழ் 49 பயனாளிகளுக்கு ரூ.14,59,500- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 1 பயனாளிக்கு ரூ.32,375 நாட்டுக்கோழி வளற்ப்பிற்கான தொகையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3,000- மதிப்பிலான சலவைப் பெட்டிகளும், வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.2,75,000ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என 57 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17,69,875ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், தனித்துணை கலெக்டர்(ச.பா.தி) புஷ்பவதி, மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் சீனிவாசன், வட்டாட்சியர்(ச.பா.தி) ஷாஜஹான் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்