முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி -      ஆண்டிபட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவிகள் 122 பேர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினர்.பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு முன்னிலை வகித்தார்.மிதிவண்டிகளை வழங்கி தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ பேசியதாவது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளும் இருக்க வேண்டும் என்று அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை கொண்டு வந்தவர் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக அரசின் பட்ஜெட்டில் 30ஆயிரம் கோடியை கல்வி துறைக்கு ஒதுக்கி கல்வி புரட்சியை ஏற்படுத்தினார்.அவர்கள் வழியில் தற்போது உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாவின் 5 பொன்னான திட்டங்களை செயல்படுத்தும் வண்ணம் கையழுத்திட்டுள்ளார்.500 மதூக்கடைகள் மூடுவது,வேலையில்லா மாணவர்களுக்கு உதவிதொகை இருமடங்கு உயர்த்தியும்,50 சதவிகித மானியத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டி வாகனம் வழங்கும் திட்டம்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவிதொகை 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்த்துதல்,மினவர்களுக்கு ஆண்டுக்கு 5000 இலவச வீடுகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் என்று பேசினார்.


விழாவில் முன்னால் சேர்மன் பால்பாண்டியன்,நகர செயலாளர் முத்துவெங்ராமன்,கூட்டுறவு சங்க தலைவர் பாலச்சந்திரன்,குன்னு£ர் ஜெயக்குமார்,கவுன்சிலர்கள் காசிராஜன்,அருண்மதி கணேசன்,அம்மா பேரவை செயலாளர் பாலமுருகன்,மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன்,நிர்வாகிகள் வரதன்,என்.கே.சக்திவேல்,பொண் முருகன்,மகளிர் அணி கொடியம்மாள்,அம்மாபட்டி புதுராஜா,சின்னராஜா,எம்.எஸ்.ஜி.சிவா,
 சோலமலைகுமார் உள்பட ஆசியை,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்