முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசு குழந்தை கொள்கை வரைவில், குழந்தைகள் பங்கேற்பு நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்கள்

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அரசு குழந்தை கொள்கை வரைவில், குழந்தைகள் பங்கேற்பு நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி  தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியினை தொடங்கிவைத்து  மாவட்ட கலெக்டர்  தெரிவித்தாவது

நமது மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையான நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் நம் நாட்டில் குழந்தைகளின் (18 வயதிற்குள் உள்ளவர்களின்) எண்ணிக்கை மொத்த மக்கள் தொகை கணக்கில் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இந்தியாவில் எதிர்கால நலனுக்காக அரசாங்கம் அவர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு, பராமரிப்பிற்காக பலத்திட்டங்களை வகுத்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குழந்தைகளின் உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை ஆகிய நான்கு உரிமைகளும் குழந்தைகளுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அனைத்து அரசுத்துறைகளும் செயல்படுகிறது. அந்த வகையில் பங்கேற்கும் உரிமை மூலம் குழந்தைகள் ஆகிய நீங்கள் இருக்கும் குடும்பம், சமுதாயம், கல்விக்கூடங்கள் மற்றும் ஏனைய இடங்களிலும் அனைத்து நற்செயல்களிலும் ஈடுபடுவதன் மூலம் பங்கேற்பதற்கான உரிமைகளை குழந்தைகளாகிய நீங்கள் பெறுகின்றனர். அரசு குழந்தை கொள்கைகள் வரைவில் குழந்தைகளின் பங்கேற்றல், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க குழந்தைகள் அனைவரும் தாமாக முன்வந்து தங்களது கருத்துகளை எடுத்து கூறவேண்டும் என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சி தாசன், மாவட்ட சமூக நல அலுவலர் பூங்கோதை, காவல் துறையினர் சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்