முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தை தாய் கடமையுணர்வோடு செயலாற்றும் பள்ளிகள் பிள்ளைகளின் வாழ்வை உயர்வடையச் செய்கிறது” முனைவர் கு. ஞானசம்பந்தம்

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் கணவாய்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் பள்ளியின் நான்காவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு  பள்ளியின் தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் கயல்விழி வரவேற்புih நிகழ்த்தினார் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற நடுவரும். கல்லூரிப் பேராசிரியரும், திரைப்பட நடிகருமான முனைவர் கலைமாமணி விருது பெற்ற கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அவர் தனது சிறப்புரையில் “ இன்று நம் நாடு கல்வித்துறையில் வெகு வேகமாக வளர்ச்சிப்பெற்று வருகிறது. இன்றைய மாணவ சமுதாயம் பல துறைகளிலும் தங்களது திறமைமைகளை நிரூபித்து வருகிறார்கள். நமது கலாச்சாரம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முதுமொழிக்கிணங்கவும், ஈன்ற பொழிதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்கவும் இளைய மாணவ சமூதாயத்தை உருவாக்குவதில் பள்ளிக்கல்வி பெரும்   பங்காற்றுகிறது. அதுபோன்ற கல்வியை வழங்குவதில் பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளி சிறப்பாக செயலாற்றுவதை அறிந்து  பாராட்டுகிறேன். இ;ப்பபள்ளியின் மாணவர்கள் தனித்திறன் வளர்க்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு தொலைத்தொடர்பு வசதியுடன் கூடிய கணினி மையம், நூலகம், கணித மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளது தென்தமிழ் நாடு அளவில் பல பள்ளிகளில் நடைப்பெற்ற கராத்தே, யோகா, குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டிகள், ஓவியப்போட்டிகள், அறிவியல், மற்றும் கணித கண்காட்சிகள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளதைக் கண்டு அவர்களைப் பாராட்டுகிறேன். இப்பள்ளியில் தந்தை தாய் கடமையுணர்வோடு பணியாற்றும் ஆசிரியப்பெரு மக்களை வாழ்த்துகிறேன்” என வாழ்த்திப் பாராட்டினார்.

இவ்விழாவிற்கு தினமலர் வெளியீட்டாளர் முனைவர்  இலட்சுமிபதி அவர்கள் தனது வாழ்த்துக்களை காணொலி காட்சி; மூலம் தெரிவித்திருந்தார். அவர் தனது வாழத்;துரையில் “இனி வரும் காலங்களில் அகில இந்திய அளவில் மாணவர்கள் பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற வேண்டுமானால் பர்ஸ்ட் ஸ்டெப் பள்ளிப் போன்ற பள்ளிகளில் படிக்க வேண்டும் என்;று கூறி, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அகில உலக அளவில் பெரும் புகழ் பெற வேண்டும்” என்று வாழ்த்தினார்.  இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட கல்விக்குழுமத்தின் தலைவர் செந்தில் குமார் அவர்கள் சிறப்புரையில் “தற்பொழுதைய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கம்ப்யூட்டர் திறனுடனும், நிர்வாகத்திறனையும் எதிர்பார்க்;;;;கிறது. எனவே அதற்குர்pய தகுதிகளையும் கல்லூரிப் படிப்புடன் தேவையான  தகுதிகளையும் பயிற்சிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்;டுக்கொண்டார்;.  இவ்விழாவின் கௌரவ அழைப்பாளராக இந்திய கபடி அணியில் பயிற்ச்சியாளராக இருந்து சமீபத்தில் கபடி விளையாட்டின் உலகக்கோப்பையை இந்தியா தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள காரணமாக இருந்த பயிற்சியாளர்    பாஸ்கரன் அவர்கள் கலந்துக்கொண்டார். மேலும் இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  முன்னதாக பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி இந்த ஆண்டு நடைப்பெற்ற பல நிகழ்வுகளை புகைப்படத்துடன் வாசித்தார்.  பள்ளியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது கருத்துரையில் “பெற்றோர்கள் அனைவரும் பாலித்தீன் பயன்பாட்டை குறைத்தும் வீட்டு வாயில்களில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க குழந்தைகளுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் அனைத்துப் பெற்றோர்களுக்கும் துணிப்பைகளில் மரக்கன்றுகளை வழங்கினார்.

இவ்விழாவில் திண்டுக்கல் அனுகிரகா இன்டர்னேஷனல் பள்ளி முதல்வர் சூரியகலா, மதுரை கே.சி வித்யாலயா பள்ளி முதல்வர் சபரிமாலா, ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யாலயா பள்ளித் தலைவர் தங்கப்பாண்டி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வண்ண மயமான மேடையில் மின்னொளி அமைப்புடன் காண்போர் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி தங்க கதிரவன் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர். குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 2000 பேர்களுக்கு மேல் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்