முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.02.2017 அன்று, மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

 

 

மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 11 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்; குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 205 என மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.3465 வீதம் மொத்தம் ரூ.48510 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்(சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.தேன்மொழி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்