முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு குடும்பமாக தமிழக மக்களை நினைத்து திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ பேச்சு

புதன்கிழமை, 1 மார்ச் 2017      திண்டுக்கல்
Image Unavailable

குஜிலியம்பாறை : ஒரு குடும்பமாக தமிழக மக்களை நினைத்து திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் அதிமுக கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களின் ஆணைக்கினங்க தமிழகம் முழுவதும் கழக தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றிய கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரா.கோம்பை ஊராட்சி இந்திரகாலனி கலையரங்கில் ஒன்றிய கழக செயலாளர் நிலவள வங்கித்தலைவர் மலர்வண்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ரத்தினவேல், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சுதந்திரமணி ஒன்றியகழக பொருளாளர் கருப்பசாமி என்ற மலர் , பாளையம் நகரகழக செயலாளர் பெருமாள் , முன்னாள் ஒன்றிய துணைத்தலைவர் நல்லசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புரை ஆற்ற சிறப்பு பேச்சாளர் திருப்பூர் குணசேகரன் முன்னாள் எம்.எல்.ஏ பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றி பேசினார்கள் செல்வராஜ் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.

பரமசிவம் எம்.எல்.ஏ பேசுகையில் :

ஒரு குடும்பமாக தமிழக மக்களை நினைத்து திட்டங்களை கொண்டு வந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருவில் இருந்து கல்லறை வரையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர். கருவுற்ற தாய்மார்களுக்கு இப்பொழுது அதிமுக ஆட்சியில் ரூ.18000 ஆயிரமாக உயர்த்தி முதல் கையெழுத்தாக போடப்பட்டு உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு உலகத்திலேயே முதல் முறையாக இலவசமாக மடிக்கணினி, திருமண உதவித்தொகை ரூ.50,000 வரையிலும் ஒரு பவுன் தங்கத்தை தாலிக்கு இலவசமாக கொடுத்த அரசு அதிமுக ஆட்சியில்தான். பிறந்த குழந்தைகளுக்கு 14 வகையான பரிசு பெட்டகங்களை தாய் அன்போடு செய்தவர் எந்த குழந்தையும் பணம் இல்லாமல் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக நலத்திட்டங்களை கொண்டு வந்தவர். தொடர்ந்து மக்களுக்கு பயன்படும் இயக்கமாக செயல்படும் ஆட்சியை கைப்பற்ற திமுக திட்டம் தோல்வியை அடைந்தது மக்கள் அதிமுக ஆட்சிக்கு முழு ஆதரவு தரவேண்டும் வாழ்க அம்மாவின் புகழ் என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிகழக செயலாளர்கள் சாமிக்கண்ணு, காளியப்பன், பெருமாள், நாடுகாணி, பழனிச்சாமி, பெருமாள் சங்கர், செல்வராஜ், சீனிவாசன், ராமச்சந்திரன், சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் வடுகம்பாடி ஊராட்சி மீனாட்சி சிவக்குமார், கரிக்காலி, கலைமணி, ஒன்றிய இணைச்செயலாளர் அண்ணபூர்ணம் ரத்தினம் நகர அம்மா பேரவை இணைச் செயலாளர் ராமச்சந்திரன் கிளைச் செயலாளர்கள் காரிபட்டி பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா முடிவில் வெள்ளைச்சாமி அப்பாவு நன்றி கூறினார். கழக தொண்டர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்