முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

வியாழக்கிழமை, 2 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலையில் பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று துவக்கிவைத்தார் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வேலூர் மண்டல அலுவலகம் சார்பில் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் விற்பனை துவக்க விழா நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்த அனைவரையும் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நா.ரவி வரவேற்றார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநர் ச.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலெக்டர் குத்துவிளக்கேற்றி 2 வாங்கினால் ஒன்று இலவசம் விற்பனையை துவக்கிவைத்து பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திருவண்ணாமலை பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ்ல் 2 வாங்கினால் ஒன்று இலவச திட்டம் என்கிற சிறப்பு திட்டத்தை 2012ஆம் ஆண்டு புதியதாய் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து பிரிவு வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள இத்திட்டம் 5 ஆண்டுகாலமாக விற்பனையில் சாதனை படைத்துள்ளது இதன்தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 22ந் தேதி முதல் வருகிற 28ந் தேதி வரை இத்திட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக துணிவகைகள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன பாரம்பரிய வடிவமைப்புகளின் பட்டுச்சேலைகள் மென் பட்டுச்சேலைகள் முதல் ஜெயகார்த்திகா மற்றும் ஆர்கானிக் சேலைகள், குர்திஸ் ரகங்கள், சுடிதார் வகைகள், போர்வைகள், குல்ட்டு போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேட்டிகள், துண்டுகள், டவல்கள், ரெடிமேட் சட்டைகள் உள்பட அனைத்து ரகங்களும் விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளன. இந்த பவுர்ணமி விற்பனை நிலையத்துக்கு 2 வாங்கினால் ஒன்று இலவச திட்டத்தின் விற்பனை குறியீடாக ரூ. 57 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் விற்பனை உண்டு. இதுதவிர கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டமும் அனைத்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் நடைமுறையில் உள்ளது என்றார். முடிவில் பவுர்ணமி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago