முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் சாலை விதிககைள கடைபிடித்து, விபத்துக்களை முழுமையாக தவிர்த்திட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும் சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கோவை

கோயம்புத்தூர் பி.ஆர்.எஸ். மைதானம் காவலர் பயிற்சி பள்ளி கூட்டரங்கில் சாலைபாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நிழச்சி மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையிலும், மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ்   முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சாலைபாதுகாப்பு கையேட்டினை மாணவ மாணவியர்களுக்கு  மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   வழங்கி பேசுகையில்,

சாலை பாதுகாப்புப் பணியில் மேம்படுத்துவது சம்மந்தமாக மாநில அரசால் விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரிப்பதை போன்று விபத்துகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

          விபத்து என்பது யாரும் விரும்பி செய்யப்படுவதில்லை. இருப்பினும் மனித தவறுகள் காரணமாகவே 90 சதவீதம் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளால் பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது.

          பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளை குறைக்கும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் சிறப்பாக கொண்டாடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

          எனவே விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தும், அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை (டீடயஉம ளுpழவ)  கண்டறிந்து அதனை சரி செய்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே சாலை பாதுகாப்பு சம்மந்தமாக அனைத்து துறைகளிலும் விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோயம்புத்தூர் மாவட்டத்தில் காவல்துறையின் மூலம் குழந்தைகள் போக்குவரத்து பூங்கா ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து பராமரிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஒருங்கிணைக்கப்பட்டு அதனமூலம் பணியாளர் நியமனம் செய்து ஒவ்வொரு நாளும், பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களும், தெரிந்து கொண்டு சாலை விதிகளை தெரிந்து கொள்வதுடன் தங்கள் வீட்டிலுள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களுக்கு இதன் அவசியம் குறித்து அறிவுறுத்த வேண்டும். இதே போல் சிறியவர் முதல் பெரியவர் வரை சாலை விதிகளை கடைபிடித்து செல்வோமேயானால் முற்றிலும் விபத்தை தவிர்த்திடலாம் என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   பேசினார்.

          முன்னதாக Pசுளு  வளாகத்தில் உள்ள சாலை பாதுகாப்பு விதிகளை பள்ளி குழந்தைகள் பின்பற்றும் பொருட்டு சிறுவர் போக்குவரத்து பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர், காவல் ஆணையர் மற்றும் காவல் கண்கானிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.

                இந்நிகழ்ச்சயில், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் .ரம்யாபாரதி  துணை ஆணையர் போக்குவரத்து சரவணன்  வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முனுசாமி, உதயகுமார், கார்த்திகேயன், மணி ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்