முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ் ரெட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது:வி.ஐ.டி. துணை தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கில் ராணுவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஜி.சதீஷ் ரெட்டிக்கு விஐடி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வழங்கினார்.விஐடி பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் பற்றிய தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் ஏஎஸ்எம் சர்வதேச மாணவர் அமைப்பின் விஐடி கிளை தொடக்க விழா டெக்னாலஜி டவரில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.விஐடி மற்றும் ஏஎஸ்எம் சர்வதேச அமைப்பின் சென்னை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு தொடக்க விழாவிற்கு வந்தவர்களை விஐடி இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் வரவேற்றார்.ஏஎஸ்எம் சர்வதேச மாணவர் அமைப்பின் பணிகளை பற்றி அந்த அமைப்பின் சென்னை பிரிவு தலைவரும் கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய மெட்டிரியல் பிரிவு இயக்குநர் முனைவர் யு.காமாட்சி முதலி விளக்கி கூறினார்.நிகழ்ச்சிக்கு விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை வகித்து ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானியும் மத்திய ராணுவ அமைச்சரின் அறிவியல் ஆலோசகருமான முனைவர் ஜி.சதீஷ் ரெட்டிக்கு விஐடி சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி பேசியதாவது ராணுவ ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் விஞ்ஞானி சதீஷ் ரெட்டிக்கு விஐடி பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கவுரவம் செய்துள்ளது.மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் பேராசிரியர்களும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. உற்பத்தி துறையானது வளர்ந்து வரும் இந்திய நாட்டின் பெரிய அளவிலான வளர்ச்சியில் முக்கிய பங்காக விளங்கி மேக் இன் இந்திய திட்டத்தின் மூலம் இந்தியவின் பொருளாதாரத்தை உயர்த்தி உலக அரங்கில் அதற்கான அங்கிகாரத்தை பெற்று தர உள்ளது. உலகில் உற்பத்தி துறையில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியா ஆறாவது இடத்தை பெற்றுள்ளது. 2025 ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 25 சதவிதம் உள் நாட்டு உற்பத்தியின் மூலம் நிகழ்த்துவதற்கான செயல்களில் ஆர்வம்காட்டப்பட்டு வருகிறது. அதற்கான வளத்தை உருவாக்கும் வகையில் 9 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக கடந்த பிப்ரவரி மாதம் 13 ந்தேதி முதல்18 தேதி வரை மும்பையில் நடைபெற்ற மேக் இன் இந்தியா வார நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளி நாட்டு முதலீட்டர்கள் மூலம் 225.32 பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடுகள் வந்துள்ளன. ஜி.ஈ.சிமென்ஸ் எச்டிசி டோஷிபா மற்றும் போயிங் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உற்பத்தியை தொடங்க உள்ளன. இந்திய அரசாங்கம் மின் உற்பத்தி ஆயில் கேஸ் மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தி உள்ளிட்ட 118 விதமான பதிய உற்பத்திக்கு திட்டமிடுள்ளது. இதற்கான முதலீடு அளவு ரூ.1.85 லட்சம் கோடியாகும்.மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் என்பது உற்பத்தி பணியில் புதிய உயர் நுனுக்கங்களை கொண்டது. அப்படிபட்ட உயர் நுணுக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு இக்கருத்தரங்கில் பங்கேற்றுள்ள நிபுணர்கள் ஆலோசிக்க வேண்டும். குறிப்பாக செராமிக் அலாய்ஸ் அலுமினியம் மெக்னிசியம் போன்ற தொழில்களிலும் வான்வெளி மற்றும் ஹெர்த் மூவர்ஸ் உதிரி பாகங்கள் உற்பத்தியிலும் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஜி.சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கையும் ஏஎஸ்எம் சர்வதேச மாணவர் அமைப்பின் விஐடி கிளையை தொடங்கி வைத்து பேசியதாவது: ஒருநாட்டின் வளர்ச்சியில உபகரணங்கள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்திய நாட்டில் ஏராளமான உலோக வளங்களை கொண்டுள்ளன.அதணை பயன்படுத்தி புதிய உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.ராணுவ உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு உள்ளது. இந்திய ராணுவத்தில உள்ளைஅஜந்தா டாங்கு உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டது. அது போன்ற ராணுவ டாங்கு எந்த நாட்டிலிம் இல்லை.அதே போன்று ஏர்கிராப்ட் வாகணங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. பெரும்பையான உற்பத்திக்கான உலோகங்கள் வெளிநாட்டிலிருந்து தான் வருகிறது உள்நாட்டிலேயே அதனை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் விஐடி இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணனுக்கு சிறந்த பேராசிரியர் பணிக்கான ஏஎஸ்எம் அமைப்பின் விருதினை விஞ்ஞானி சதீஷ் ரெடடி வழங்கி அமைப்பின் நியூஸ் லட்டரை வெளியிட்டா். வழங்கப்படு சிவிஆர்டிஈ அமைப்பின் இயக்குநர் முனைவர் சிவகுமார் விஐடி துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் பேசினர். முடிவில் பேராசிரியர் ராஜா அண்ணாமலை நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்