பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு.

Class X public exam

 சிவகங்கை -சிவகங்கை மாவட்டத்தில் (08.03.2017) இன்று 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச்'2017 நடைபெறுகிறது. சிவகங்கையில் 9,997 மாணவர்களும், 9,785 மாணவியர்களும் ஆக மொத்தம்; 77 மையங்களில்;; 19,782 பேர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இன்று 19,626 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 156 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.

சிவகங்கை புனித ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஒவ்வொரு அறையிலும் தேர்வு எழுதும் மாணவர் மற்றும் மாணவியர்களின் எண்ணிக்கை குறித்தும், இம்மையத்தில் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்விற்கு வந்துள்ளார்களா எனவும், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதையும், மின்வசதி தடையின்றி உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, மையத்தில் முறைகேடுகள் ஏதுமின்றி நல்லமுறையில் தேர்வு நடைபெற கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தெரிவித்தார்.

சிவகங்கையில் முதன்மை கண்காணிப்பாளர்கள்; 77, துறை அலுவலர்கள் 77, நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 121, வழித்தட அலுவலர்கள் 24, அறை கண்காணிப்பாளர்கள் 1,292, வினாத்தாள் கட்டு மையக் காப்பாளர்கள் 10 ஆகியோர் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனா

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ