முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க உறவினர்கள் தொடர் மறுப்பு

புதன்கிழமை, 8 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்,-  இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகி அரது மருத்துமனையிலுள்ள மீனவரின் உடலை வாங்க அவரது குடும்பத்தினரும்,உறவினர்களும்,மீனவர்களும் மறுத்து வருவதால் ராமேசுவரம் அருகே உள்ள மீனவரின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் இரண்டாவது நாளான நேற்றும் பதற்றமான சூழ்நிலைகள் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த திங்கள் கிழமை மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த டிட்டோ என்பவர்க்கு சொந்தமான படகை நோக்கி இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் படகிலிருந்து மீனவர் கெம்லஸ் மகன் பிரிட்சோவின்(21) கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது உயிரிழந்தார்.இதையடுத்து அன்று இரவே ராமேசுவரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட பிரிட்சோவின் உடலை  ராமேசுவரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு அவரின் உடல் செவ்வாய்க்கிழமை காலையில் பிரேதே பரிசோதனை நடைபெற்று முடிந்தது. மீனவரின் உடலை மருத்துவர்கள் அவரது  குடும்பத்தினரிடம் ஒப்படைக்க சென்ற நிலையில் பிரிட்சோவின் குடும்பத்தினர்கள் வாங்க மறுத்துவிட்டனர். மகனின் சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரையும்,துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளிக்க வேண்டும் எனவும், இது போன்ற இன்னொரு மீனவனுக்கு இந்த நிகழ்வுகள் நேரிட கூடாது எனவும் அதற்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்சோவின் தந்தை கெம்ப்ளஸ்,தாய் பெர்மத்மேரி மற்றும் உறவினர்கள் மீனவரின் உடலை  இரண்டாவது நாளான புதன் கிழமையும் வாங்க மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் உயிரிழந்த மீனவர் பிர்ட்சோவின் சொந்த பகுதியான தங்கச்சிமடத்தில் செவ்வாய்க்கிழமை  கண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர்.மீனவரின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளாததால் போராட்டத்தை இரண்டாவது நாளான புதன் கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்,மதிமுக கட்சியின் தலைவர் வைகோ,காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவைர் திருநாவுக்கரசு,எம்.ஜி.ஆர்,ஜெ பேரவை கட்சியின் பொறுப்பாளர் மாதவன்,திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி,ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, த.மா.க கட்சியன் மாநிலத்தலைவர் ஜி.கே வாசன்,பி.ஜே.பி.கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், திரைப்பட இயக்குநர் கெளதம், மாணவர்கள் அமைப்பு மற்றும் ராமேசுவரம் வழக்குரைஞர்களும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்