முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் நடைபெற்ற 10ம் வகுப்பு தேர்வு கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

புதன்கிழமை, 8 மார்ச் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி.

 

கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வினை நாகர்கோவில், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பின்னர் தெரிவித்ததாவது:.தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு (தமிழ் முதல் பாடம்) காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை கல்வி மாவட்டத்தில் 161 பள்ளிகளில் (மாணவர்கள் - 4,595, மாணவியர்கள் - 4,535 என தொத்தம் 9,130 மாணாக்கர்கள்), குழித்துறை கல்வி மாவட்டத்தில் 145 பள்ளிகளில் (மாணவர்கள் 3,957, மாணவியர்கள் - 4,078 என தொத்தம் 8,035 மாணாக்கர்கள்), நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 116 பள்ளிகளில் (மாணவர்கள் - 4,154, மாணவியர்கள் - 4,164 என தொத்தம் 8,318 மாணாக்கர்கள்) என மூன்று கல்வி மாவட்டத்தில் 25,483 மாணவ, மாணவியர்கள் (மாணவர்கள் - 12,706, மாணவியர்கள் - 12,777) 108 தேர்வு மையங்களிலுள்ள 422 தேர்வு கூடங்களில் எழுதுகிறார்கள். பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக, சொல்வதை எழுதுபவர் பணிக்காக 89 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிப்பதற்காக 210 பறக்கும் படை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் சிறப்பாக நடத்தி முடித்திட காவல் துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு, கண்காணித்து வருகிறார்கள் என கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்துள்ளார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) (நாகர்கோவில்) நட்ராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் இராதாகிருஷ்ணன், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார் மற்றும் முதன்மை கண்காணிப்பாளர் .மேரி ஹெலன் ப்ரேமா ஆகியோர் உடனுள்ளனர்.

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்