எளிய முறையில் புற்றுநோயை நவீன முறையில் கண்டறிதலும் சிகிச்சையும்

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      மருத்துவ பூமி
Dinesh kumadr

Source: provided

பெருகிவரும் வயிற்றின் இறைப்பை புற்றுநோய் சம்மந்தமான நவீன முறையில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் தீர்வு பெற்று நலமுடன் வாழவும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள். நமது இறைப்பையில் புற்றுநோய்கள் உண்டாக நமது உணவு பழக்க வழக்கங்கள், மற்றும் H-PYLORI என்ற மிக முக்கியமான பாக்ட்ரீயாவே. இந்த பாக்ட்டீரியாவினால் இறைப்பை புண் உண்டாகின்றது. இந்த புண் நீண்ட நாட்கள் உரிய வைத்தியம் செய்யாமல் இருப்பதால் இரத்த சோகை நோய், புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. புற்றுநோய் உண்டாக காரணமாகவும் உள்ளது.

புகைப்பிடித்தல், உடல் பருமன், உப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் உட்கொள்வது, TYPE-A, BLOOD GROUP, குடும்ப நபர்களில் மேற்படி இறைப்பை புற்றுநோய் யாருக்காகிலும் இருப்பின் போன்ற காரணங்களாலும் புற்றுநோய் உருவாக காரணமாக உள்ளது.

அறிகுறிகள் : அஜீரணம், வாந்தி, வயிறு உப்புதல், பசியின்மை, எடை குறைவு, கருப்பு நிறமான இரத்த வாந்தி, கருப்பு நிற மலம் கழித்தல் போன்றவை ஆரம்ப கட்ட புற்றுநோயின் அறிகுறிகள். புற்றுநோய் முற்றிய நிலையில் இரத்த வாந்தி, மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட காரணமாய் உள்ளது. யாருக்காகிலும் இருப்பின் அதன் காரணங்களாலும் கண்டறியும் முறை இன்றைய நவீன மருத்துவ காலத்தில் மேற்படி நோயை கண்டறிய இரத்த பரிசோதனை, லிவர் டெஸ்ட் மூலம் மஞ்சள் காமாலைக்கான ரத்த பரிசோதனை. மேலும் நவீன மருத்துவத்தின் TUMUR MARKER, CEA, மற்றும் CA 19-9 போன்ற பரிசோதனைகள் மூலம் உடலில் புற்றுநோய் கண்டறியப்படுகின்றது.

எண்டாஸ்கோபி: எண்டாஸ்கோப் பரிசோதனை மூலம் மேற்படி இறைப்பையின் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மேலும் (பயாப்சி) சதைப் பரிசோதனை மூலம் புற்றுநோய் உள்ளதா என உறுதி செய்யப்படுகிறது.

பேரியம் ஸ்டடி (BARIUM STUDY) : மார்பக X RAY, CT ABDOMEN அப்டமின் மூலமாக இதர பரிசோதனைகள் மூலம் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சி, மற்ற உறுப்புகளில் பரவிஉள்ள தன்மைகளை கண்டறிய முடியும். இந்த பரிசோதனை மூலமாக இறைப்பையின் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள இயலும்.

வைத்திய முறைகள்:  நோயின் தன்மையை கண்டறியப்பட்டு இன்றைய நவீன மருத்துவத்தில் பெரும்பாலும் ஸ்டேஜ்-0 முதல் ஸ்டேஜ்-2 வரையில் உள்ள கட்டிகளை சிறந்த நவீன மருத்துவ அறுவை சிகிச்சையான லேபராஸ்கோப்பி மூலமே அகற்றிவிட முடியும். கட்டியை அகற்றிய பின்பு கீமோதெரபி (CHEMO THERAPY) மற்றும் ரேடியோதெரபி (RADIO THERAPY) கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்.

மேலும் ஸ்டேஜ்-3 மற்றும் ஸ்டேஜ்-4, நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய இயலாது. ஆனால் கீமோ தெரபி (CHEMO THERAPY) ரேடியோதெரபி (RADIO THERAPY) கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் எதுவானாலும் உடனே உரிய மருத்துவரை அனுகி முறையான எளிமையான எண்டோஸ்கோபி பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். அல்லது தாங்களாகவே ஏதாகிலும் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொள்ளக் கூடாது.

பழ வகைகள், காய்கறி வகைகள் அதிகப்படியான உணவாகவும், உடல் எடையை குறைத்தும் நலம் காக்க வேண்டும். புகைபிடித்தல், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க மிகவும் நலம் என்பதை அறியவும்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: