முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஜெயா அவர்கள் ஆய்வு நடத்தினார். சென்னை உயர்நீதிமன்ற உத்திரவுப்படி தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் உத்திரவிட்டிருந்தனர்.அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஜெயா அவர்கள் ஆய்வு நடத்தினார்.ஆய்வில் அவர் அதிகாரிகளுக்கு சீமை கருவேல மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிக்குட்பட்ட இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை 2அல்லது 3 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.அப்போது உடன்வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் ,வந்த வாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை,பி; .மூர்த்தி ,வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்ச்செல்வி,ஆறுமுகம் பெரணமல்லூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்;,கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், வருவாய்த்துறை ஊழியர்கள் ,நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்