முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கொரியாவில் அதிபர் பதவி நீக்கம் எதிர்த்து போராட்டம் - 2 பேர் பலி

சனிக்கிழமை, 11 மார்ச் 2017      உலகம்
Image Unavailable

சியோல்  - தென் கொரியாவில் அதிபர் பதவி நீக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 2 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்களை போலீசார் மிகவும் சிரமப்பட்டு அடக்கினர்.

ஊழல் குற்றச்சாட்டு
தென் கொரிய அதிபராக இருந்தவர் பார்க் ஜியுன்-ஹை (65). இவர் அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்று இருந்தார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். பாராளுமன்றத்திலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருந்தாலும் அரசியல் சாசன கோர்ட்டு முடிவே இறுதியானது. எனவே, அந்த கோர்ட்டின் தீர்ப்புக்காக தென் கொரிய மக்கள் காத்திருந்தனர்.

தேர்தல் நடத்த உத்தரவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் பார்க் ஜியுன்- ஹை ஊழல் குற்றவாளி என அறிவித்தது. அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 60 நாட் களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தீர்ப்பை கேட்க அரசியல் சாசன கோர்ட்டு முன்புபார்க் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கூடியிருந்தனர். பார்க் பதவி நீக்கம் தீர்ப்பை கேட்டதும் எதிர்ப்பாளர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கடும் மோதல்
அதே நேரத்தில் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கட்டுப்படுத்தினர். இதனால் பார்க் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. அதை தொடர்ந்து நடந்த தகராறில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். கலவரக்காரர்களை போலீசார் மிகவும் சிரமப்பட்டு அடக்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்