நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2765 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.03 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள்:அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வி.சரோஜா ஆகியோர் வழங்கினார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      நாமக்கல்
1

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாக்கள் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் மற்றும் எருமப்பட்டி செவந்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும் இன்று (11.03.2017) நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாக்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாக்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்களும் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா அவர்களும் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்கள்.இவ்விழாக்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசும் போது தெரிவித்ததாவது,நாமக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான செவந்திப்பட்டி பகுதியில் இன்றைய தினம் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வாடகை கட்டிடத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய சொந்த கட்டிடம் கட்டுவதற்கு ரூ.60.00 இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான கட்டிடப்பணிகளும் துவங்கப்படவுள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித்தருகின்ற அரசாக தொடர்ந்து அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு தொடர்ந்து நிறைவேற்றி தந்து கொண்டிருக்கின்றது. பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று 100 சதவிகித தேர்ச்சியையும் பெற்றுத்தருவதோடு, தாங்கள் படித்த பள்ளிக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் உங்களது பெற்றோர்களுக்கும் பெருமையை தேடித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.இவ்விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பேசும் போது தெரிவித்ததாவது,மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து மறைந்த அம்மா மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்து அதனை முழுமையாக நிறைவேற்றி தந்துள்ளார்கள். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றது. குழந்தைகளை பாதுகாப்பதற்கு குழந்தைகள் மையங்களை ஏற்படுத்திக் கொடுத்து கலவை சாதத்துடன் முட்டையும் கொடுத்து, பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சத்துணவு திட்டத்திற்கு அம்மா ரூ.1644.00 கோடி நிதியினை ஒதுக்கி தந்துள்ளார்கள். இதன் மூலம் தமிழகத்தில் சத்துணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தொலைதூர மாணவர்களும் விரைந்து பள்ளிக்கு வந்து பாடங்களை படிக்க வேண்டும் என்பதற்காக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளை விட அதிகமான வசதி வாய்ப்புகள், நலத்திட்டங்கள் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு, 100 சதவிகித தேர்ச்சியையும் பெற்றுத்தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பேசினார்.இந்த விழாக்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் வரவேற்புரையாற்றினார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ஜி.ரமேஷ்குமார், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் என்.ஜெகதீசன், அரசு வழக்கறிஞர் தனசேகர், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் க.மணி, முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் து.சரஸ்வதி நன்றியுரையாற்றினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: