முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர் பேரூராட்சியில் இலவச மருத்துவ முகாம் : எம்.பி.வேணுகோபால், பலராமன் எம்.எல்.ஏ பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      சென்னை
Image Unavailable

மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர்,அண்ணா.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.முகாமினை கழக மருத்துவ அணிச்செயலாளரும்,நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான,திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால்,திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளர்,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,மீஞ்சூர் பொதுநல மருத்துவர் விஜயராவ்,டாக்டர் ராஜ்கமல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்கள்.

 எலும்பியல் நிபுணர் டாக்டர் டேவிஷ் செந்தில்குமார் ஏற்பாட்டில் சென்னை பொது மருத்துவர் லெனின் கண்ணன் தலைமையிலான மருத்துவக்குழு இம்முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.உயர் ரத்த அழுத்தம்,சர்ககரை நோய் மற்றும் இரத்தப்பரிசோதனைகள் செய்யப்பட்டது.பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளும்,மிக உயர்ந்தவகை மருந்து மாத்திரைகளும் இம்முகாமில் வழங்கப்பட்டது.சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதில் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.

இந்த முகாமில் மீஞ்சூர் ஒன்றியக் கழக துணைச்செயலாளர் எம்.வி.சுந்தரம்,மேலூர் முன்னாள் தலைவர் கோவிந்தராஜ்,ஐ.ஓ.சி.மகிமை பெட்ரோல் பங்க் ஓனர் மகிமைதாஸ் முன்னிலை வகித்தனர். மீஞ்சூர் நகர துணைச்செயலாளர் தமிழரசன்,எம்.ஆர்.வீரன்,நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் அஸ்கர்அலி,முன்னாள் கவுன்சிலர் கொண்டக்கரை அமிர்தலிங்கம் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்

மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் பானுபிரசாத்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் கோளூர் கோதண்டன்,ரூரல் வங்கி தலைவர் வெற்றிவேல் ராமலிங்கம்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம்,முன்னாள் நாலூர் ஊராட்சிமன்றத் தலைவர் முத்துகுமார்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இளையராஜா,மீஞ்சூர் வழக்கறிஞர் மாரி,பட்டமந்திரி சசி,மேலூர் அலெக்ஸ் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு சுப்பிரமணி,சமதர்மி அம்மாள் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் தேவதானம் கூட்டுறவு சங்கத்தலைவர் சம்பத் எனும் கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்