முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ.வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளி 36ம் ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நர்சரி பிரைமரி பள்ளியின் 36ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளியின் பள்ளி நிர்வாகி மு.பொற்செல்வி தலைமை தாங்கினார். சோழா அரிமா சங்க தலைவர் பாலபுகழேந்தி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஆர்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் ஏ.பூம்பாவை ஆண்டறிக்கை வாசித்தார். அரிமா சங்க முதல் உபதலைவர் கோபி, ஆர்.கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவியர்களுக்கிடையே தடகளப்போட்டிகள் பல்வேறு போட்டிகள் நடந்தது. பள்ளியில் அனைத்து துறையிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவ-மணவியர்கள் ஆசியர்கள் உட்பட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்