முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர்கள் வேண்டுகோளுக்கு இனங்க மீனவர்களின் போராட்டம் இன்று வாபஸ்:

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேஸ்வரம்,-  இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவரின் சாவுக்கு தகுந்த நியாயம் கிடைக்கவேண்டி ராமேசுவரம் அருகே உள்ள மீனவரின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் இருந்துவந்த கண்டன்  போராட்டம் மத்திய அமைச்சர்கள் வேண்டுகோளுக்கு இனங்க ஏழாவது நாளான இன்று போராட்டத்தை வாபஸ் பெற்று மீனவரின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்ய உள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள்  ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
   ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த திங்கள் கிழமை மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த  மீனவர் கெம்லஸ் மகன் பிரிட்சோவின்(21)  மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றமான சூழ்நிலைகள் காண்ப்பட்டது.இதையடுத்து பிரிட்சோவின் உடல்  ராமேசுவரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு பிரேதே பரிசோதனை நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மீனவர்  பிரிட்சோவின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும்,துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டுயும்,இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க வேண்டியும், இந்திய கடலோரப்பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க வழிவகுக்கும் வகையில் மத்திய அரசு பிரிதிநிதிகள் போராட்ட பந்தலில் வந்து உத்திரவாதம் அளிக்க வேண்டி மீனவர் பிரிட்டோவின் குடும்பத்தினர்களும்,மீனவர்களும், மீனவரின் உடலை வாங்க  ஈடுப்டடு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் தமிழக பகுதிகளை சேர்ந்த அரசியல் அமைப்பகளும்,சமூக ஆர்வாளர்களும்,மாணவர்களும்,தமிழ் இன போராட்டகுழுவினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று மத்திய தொழில்துறை அமைச்சர்கள் நிர்மலாசீதாராமன் மற்றும் மத்திய  நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துரையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர்கள் போராட்டம் நடத்தும் பகுதியில்  மீனவர் பிரிட்சோவின் தாய் மற்றும் தந்தையுடம் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் மீனவ சங்க பிரிதிநிதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில்  மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மீனவரின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்யுங்கள் என மீனவர்களிடம் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.அதன் பேரில் இன்று திங்கள் கிழமை மீனவர் பிரிட்சோவின் உடலை பெற்று நல்லெடக்கம் செய்யவுள்ளதாகவும்,அதன் பின்னர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் மீனவ சங்க பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர்.
 
துப்பாகி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.மத்திய அமைச்சர்கள் மீனவர்களிடம் உறுதி.

கடந்த மார்ச் 6 ஆம்  திங்கள் கிழமை இரவு ராமேசுவரம் பகுதியிலிருந்ரு மீன்பிடிக்க சென்ற மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் நடத்திய சுப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்,அவரின் உயிரிழப்பு குறித்து தகவலறிந்த 2 மணி நேரத்திற்குள் பிரிதமர் மோடி இலங்கை பகுதியிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த  காரணம் குறித்து தகவல் அனுப்ப வேண்டும் என உத்தரவுயிட்டார்.அதன் பேரில் தூதரக அதிகாரிகள்  இலங்கை பிரதமரிடம் சென்று இது குறித்து பதில்தர வேண்டியுள்ளார்.பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவுயிட்டுள்ளார்.அதுமட்டும் அல்ல என்னை நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மீனவனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து மனநிலைகல் குறித்து விசாரணை செய்து வா என அனுப்பியுள்ளார்.மத்திய அரசு மீனவன் பலிக்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இலங்கை சிறையிலுள்ள 85 மீனவர்களையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை வசமுள்ள 136 படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆதலால் மீனவனை இழந்த குடும்பத்தினர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் அதற்கான முயற்ச்சியில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என மீனவர்களிடம் மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்