ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 80 கன அடியாக அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      தர்மபுரி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 80 கன அடியாக அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒகேனக்கல்லுக்கு தமிழ்நாடு கர்நாடகா, ஆந்திரா, மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரங்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக மிக குறைந்த அளவான கன அடி வீதம் மட்டும் தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் வற்றிய நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நீர்வீழ்ச்சி வெறும் பாறைகளாக காணப்பட்டன. மெயினருவியில் பெயரளவுக்கு மட்டுமே தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். விடுமுறை தினமான நேற்று மதியம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் நேற்று தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 80 கன அடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்பரித்து கொட்டிய நீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: