முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்டம் அகூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தினை கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்டம் அகூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்து கூறியதாவது.தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 1519 பொதுப்பணித்துறை ஏரிகளை புனரமைக்க ரூ.100 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 46 ஏரிகளை புனரமைக்கும் பணி ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளது. கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஏரிகளும், திருத்தணி ஊராட்சி ஒன்றிய்த்தில் 12 ஏரிகளும், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஏரிகளும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய்த்தில் 1 ஏரியும், இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஏரிகளும், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஏரிகளும், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஏரிகளும் மற்றும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஏரிகளும் என மொத்தம் 46 ஏரிகள் புனரமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசாங்கத்துடன் பொதுமக்கள் இணைந்து தங்களது பங்களிப்பினை தர வேண்டும். இத்திட்டத்தி;ல் விவசாயிகள் 10 சதவீதம் பங்களிப்பை உடல் உழைப்பு மூலமாகவும் அல்லது பொருள்களாகவும் அல்லது நிதியாக பங்களிக்கலாம். அகூர் பெரிய ஏரியில் நடைபெறும் பணிகள் மொத்தம் ரூ.9.7லட்சம் ஆகும்.

 

இத்திட்டத்தின் வாயிலாக ஏரிக்கரையில் உள்ள முட்புதர்களை முழுவதுமாக அகற்றி கரையை பலப்படுத்துதல், ஏரியில் உள்ள சேதமடைந்த இரண்டாவது மதகினை சீரமைத்தல், ஏரி வரவுக்கால்வாய் மற்றும் உபரிநீர் கால்வாய் தூர் வார்தல், மதகு பாசன வாய்க்கால்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

 

மேலும் குடிநீர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1077 என்ற கட்டனமில்லா தொலைப்பேசி எண்னை தொடர்பு கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் புகார்களை தெரிவிக்கலாம். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டு அவர் மேற்பார்வையில் குடிநீர் விநியோகம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் புகார்கள் அதிகபட்சமாக 4-5 மணி நேரத்திற்கும் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்,டி.ஏ.ஏழுமலை,நரசிம்மன்,பலராமன்,கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஏ.எம்.அசோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் , உதவி செயற் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்