முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வநாதபுரம் ட்ரஷர் ஐ லேண்ட் இண்டர்நேஷ்னல் பள்ளி ஆண்டு விழா

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி,

 

விஸ்வநாதபுரம் ட்ரஷர் ஐ லேண்ட் இண்டர்நேஷ்னல் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.தென்காசியை அடுத்துள்ள விஸ்வநாதபுரம் ட்ரஷர் ஐ லேண்ட் இண்டர்நேஷ்னல் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கருணாகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் சேக் செய்யது அலி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாகி முகமது பண்ணையார், அரிமா சங்க செயலாளர் கம்பீரம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் சமீமா பர்வீன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர், மாணவ, மாணவிகளின் தனித்திறமைகள் வெளிகொண்டுவருவதற்கு ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது என்றும் கட்டிடங்களுக்கு உறுதியான அஸ்திவாரம் எப்படி முக்கியமோ, அதுபோலத்தான் சிறுவயது மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கல்வி மிக முக்கியம் என்றார். அடிப்படை கல்வி கொடுப்பதற்கு திறமையான ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் தேவை என்றும் ட்ரஷர் ஐ லேண்ட் இண்டர்நேஷ்னல் பள்ளி போன்ற புதிதாக தொடங்கும் பள்ளிகள் வளரக்கூடியவைகள் என்றும் இதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மிக உத்வேகத்துடன் செயல்படுவார்கள் என்றும் இதனை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகள் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அனைத்து செல்வங்களிலும் கல்வி சிறந்தது என்றும் நல்லொழுக்கம், நல்ல பண்பாடுகள், நற்செயல்கள், நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நன்னடத்தைகள் என சிறப்பானவற்றை இதுபோன்ற சிறந்த பள்ளியில் மாணவச்செல்வங்கள் பெற்று குடும்பத்திற்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மாணவர்கள் படிக்கும் காலங்களிலேயே குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது போன்ற கல்வியை வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது என்றும் அவர்களின் சுயவிருப்பத்திற்கு விட்டுவிடவேண்டும் என்றும் மாணவர்களிடையே ஆசிரியர்கள் நல்ல நண்பர்களைப் போல பழகவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்கள் தங்கள் குறிக்கோளை எட்டமுடியும் என்றும் பேசினார். இறுதியில் பள்ளி செயற்குழு உறுப்பினர் முகம்மது அசாரூதீன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்