முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வராக அம்ரிந்தர் சிங் இன்று பதவி ஏற்பு: ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

சண்டீகர், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராக அம்ரிந்தர் சிங் இன்று காலையில் பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார்.

5 மாநில சட்டசபை தேர்தலில் 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதனையொட்டி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் காங்கிரஸ் அரசு அமைகிறது. மாநிலத்தின் 26-வது முதல்வராக அம்ரிந்தர்  பதவி ஏற்றுக்கொள்கிறார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்த நாள் பரிசு:

கடந்த 11-ம் தேதிதான் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றிபெற்றால் அம்ரிந்தர் சிங்தான் முதல்வர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் வெற்றிபெற்றதால் அம்ரிந்தர் சிங்கிற்கு பிறந்தநாள் பரிசு என்று கூறப்பட்டது. மார்ச் 11-ம் தேதிதான் அமரிந்தர் சிங்கிற்கு பிறந்த நாளாகும். முதலில் முதல்வர் மற்றும் 8 அமைச்சர்களும் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேபினட் அமைச்சரவை பின்னர் விரிவுபடுத்தப்பட உள்ளது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பதால் அமைச்சரவையில் 16 அமைச்சர்கள்தான் இருக்க முடியும். கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் 8 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு கவர்னர் வி.பி.சிங் பட்னோர் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைக்கிறார். பதவி ஏற்பு விழாவை எளிமையாகவும் சிக்கனமாகவும் நடத்த அம்ரிந்தர் சிங் முடிவு செய்துள்ளார்.

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் மெஜாரிட்டி இல்லாததால் அரசு அமைக்க முடியவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்