முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம்:ஆணைய தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 15 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்கு கலெக்டர் சி.அ.ராமன், முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் பேசியதாவது.தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக் காத்திடவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்தமத்தினர், பார்சிகள்,(nஐhராஷ்ரியர்கள்) மற்றும் சமண மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மதவழி சிறுபான்மையினத்தவராக கருதப்படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினரின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை, சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான பொதுப்பரிசுகள் வழங்கும் திட்டம், மாநில அளவிலான உருது மொழிப்பரிசுகள் திட்டம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல திட்டம் இத்திட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை 1412 பேர் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் இதுவரையில் 299 பயனாளிகளுக்கு ரூ5.08 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் திட்டங்கள், சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில்கள் செய்வதற்கு மிகக்குறைந்த வட்டிவித்தில் பல்வேறு கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் வேலூர் மாவட்டத்தில் 483 பயனாளிகளுக்கு ரூ.205.48 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு மூலம்; சிறுபான்மையினர் நலனுக்காக 15 அம்ச நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போல தமிழக அரசும் இந்திய அரசும் சிறுபான்மையின மக்களுக்காக தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. ஆகவே இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ள நலவாரிய உறுப்பினர்கள் தங்களுடைய ஆலோசனைகளையும் குறைகளையும் தெரிவித்தால் அவற்றை தீர்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பரிந்துரைத்து உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையத்தின் தலைவர் கூட்டத்தில் பேசினார்.மேலும் கூட்டத்தில் சிறுபான்மையினர் இனத்தை சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி திட்டங்கள், புதிய தொழில் தொடங்குவதற்கு வழங்கப்படும் வங்கிகடன்கள் குறித்தும் மசூதிகள், கிறித்துவ ஆலயங்கள் புணரமைப்புகளுக்கு அரசால் வழங்கப்படும் நிதியுதவிகள் குறித்தும் திட்டத்தை விரிவாக அனைவரும் தெரிந்து கொண்டு பயனடையும் விதமாக மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் யு.சுதீர் லோதா அவர்கள் கனிணியில் பவர் பாயின்ட் மூலம் விவரித்தார். மேலும் சிறுபான்மையினர் தங்களுடைய நீண்ட கால பிரச்சனைகள் மீது தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவற்றை தாங்களே pபிழசவயட.பழஎ.in என்ற இணை தள முகவரியில் பதிவுசெய்து அவற்றின் மீது உடனடியாக தீர்வு கிடைக்கபெறும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வேலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 14 ஏழை முஸ்லீம் மகளிர்களுக்கு உதவித்தொகையாக ரூ59 ஆயிரத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் மரு.எம்.பிரகாஷ் அவர்களும் கலெக்டர் வழங்கினார்கள்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள் யு.சுதீர் லோதா, கே.கலாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் nஐயபிரகாஷ், மாவட்ட சிறுபான்மையினர் நலச்சங்க பிரதநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago