முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர்,இஆ.ப தலைமையில் நடைபெற்ற மாவட்ட திட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரூ.70,00,000/-இலட்சத்திற்கான கடனுதவி காசோலையினை வழங்கினார்.

புதன்கிழமை, 15 மார்ச் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட  தலைமையில் நடைபெற்ற மாவட்ட திட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ரூ.70 இலட்சத்திற்கான கடனுதவி காசோலையினை கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகளிடம் வழங்கி பேசியதாவது,

          நீலகிரி மாவட்டத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கீழ் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 35  கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு(பொது)ஐந்தாவது தவணை சமுதாய முதலீட்டு நிதியாக தலா ரூ. 1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.35/- இலட்சமும், 34 பொது கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கும், கோத்தகிரி வட்டாரத்தின் அரக்கோடு ஊராட்சியில் பொது கிராம வறுமை ஒழிப்பு சங்கம் இல்லாத காரணத்தினால் தலைமையிடமான காரப்பணை சிறப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் தலா 10 விவசாயம் சாரா தொழில் மேற்கொள்ளும் பயனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.35 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.70 இலட்சத்திற்கான  நிதி  வழங்கப்பட்டுள்ளது.

          எனவே இந்நிதியினை கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்ட விவசாயம் சாரா தொழில் மேற்கொள்ளும் பயனாளிகளும்,மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு  மாவட்ட கலெக்டர்  கூறினார்.

          அதனை தொடர்ந்து மலைப்பகுதி மேம்பாட்டு பயிற்சி அரங்கில் விவசாயிகள் பங்கு பெறும் இயற்கை வேளாண்மை ஒரு நாள் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

          பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் டிஜிட்டல் இந்தியா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர்  கொடியசைத்து துவக்கி வைத்தார். 

          மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட கலெக்டர்  வெளியிட்டார்.

           மேலும் வாகன விபத்தில் வலதுகால் இழந்த கீழ்கோத்தகிரி  பகுதியை சார்ந்த கே.சசிகுமார் என்பவருக்கு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரின் விருப்பநிதியிலிருந்து ரூ.1,20,000/-ரொக்கபணத்தினை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்.

                இந்நிகழ்ச்சியில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா,இ.வ.ப, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago