முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருவேல மரங்களை அகற்றுங்கள்:அம்மா திட்ட முகாமில் தாசில்தார் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரை அடுத்த அரிகலபாடி கிராமம் உள்ளது. அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினா சு.ரவியின் சொந்த கிராமமாகும். இந்த கிராமத்தில்; அம்மா திட்ட முகாம் நேற்று (வெள்ளிகிழமை) நடைபெற்றது. ஒவ்வொரு வாரம் ஒரு கிராமம் என்கிற தமிழக அதிமுக அரசின் ஆணைக்;கிணங்க நடைபெற்று வருகிறது. இம்முகாமிற்கு வந்தவர்களை நிர்வாக அலுவலர் கலைவாணன் வரவேற்று பேசினார். சமூக பாதுகாப்பு ஜெயந்தி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பாஸ்கர் முகாமிற்கு தலைமை ஏற்று 50- ற்கும் அதிகமான மனுக்கள் மீது நலஉதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியபோது அம்மா திட்ட முகாமானது உங்களுக்காக அரசால் கொண்டு வரப்பட்டது. அதாவது மக்களின் குறைகளை நேரிடையாக அவரவர் கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று தீர்ப்பதாகும். இன்று பலரது குறைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. மேலும், உங்கள் கிராமங்கள் வளத்துடன் இருக்க உங்களது வீட்டருகில் உள்ள (அருகில் உள்ள கருவேல மரங்களை சுட்டி காட்டி) இது போன்ற மரங்களை அகற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என்று பேசினார். இம்முகாமில் மக்கள் பிரதிநிதிகளான எல்.வினோத்குமார், ஸ்ரீதர், மதியழகன், ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முகாம் ஏற்பாடுகளில் கிராம அதிகாரிகள் நெடுஞ்செழியன் (மாங்காட்டுசேரி) கோகுலகிருஷ்ணன் (கணபதிபுரம்) ராஜேஷ்குமார் (சயனாவரம்) வினோத் (ஜாகீர்தண்டலம்) உள்ளிட்டவர்களும், உடன் சிப்பந்திகளும் ஈடுபட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்