எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டிசுட் ஆப் டெக்னாலஜியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      விழுப்புரம்
DSC 0459

எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டிசுட் ஆப் டெக்னாலஜியில் 18.03.17 அன்று தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.எம்.ஆர்.கே. இன்ஸ்ட்டிசுட் ஆப் டெக்னாலஜியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் கணினி அறிவியல் பொறியியல் துறையில் மாணவர்களுக்கு தேசிய அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் சேர்மன்    கதிரவன்   தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக  ஏ. சக்திவேல்  மேலாண்மை இயக்குனர்   மற்றும்  மு. தணிகைவேல்  பொது மேலாளர்  விழாவில் சிறப்புரையாற்றினார். நடுவராக  விஜயலெட்சுமி  இணை பேராசிரியர்  பரந்தாமன்  இணை பேராசிரியர்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 80-க்கும் மேலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 45-க்கும் மேலான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தனர். நிறைவு விழாவில்  பரந்தாமன்  வாழ்த்துரையாற்றினார். கல்லூரி முதல்வர்  ஆனந்தவேலு  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: