முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் தொடக்கவிழா

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம்; குசைளவ டுழழம @ யுளிசைiபெ புசயனரயவந – யு துழுடீ குஐநுளுவுயு 2017என்ற இருநாள் வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக மேலாண்மை வளாகத்தில் நடத்தி வருகிறது. 

இந்நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில், அழகப்பா பல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்பு மலரை வெளியிட்டு, துணைவேந்தர் பேராசியர் சொ.சுப்பையா தனது தலைமையுரையில், பல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின்; ஏற்பாடுகளை பாராட்டியதோடு, இந்த முகாமில் 12 முன்னோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் பங்கேற்பதாகவும், இந்த முயற்சி பல்கலைக்கழகத்தின் நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறினார். இக்குழுமம் செய்யும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டும் முயற்சிகளை பற்றி விளக்கினார். பல்கலைக்கழகமும் அதன் பணியாளர்களர்களும் தமது அனைத்து செயல்களையும் மாணவர்கள் நலநன கருத்தில் கொண்டும், அவர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்;.

வெளியிடப்பட்டிருக்கும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புமலர் பல்கலையின் தனித்துவ ஆற்றல்களான கற்பித்தல,; ஆய்வு மற்றும் சமூகம் சார்ந்த விரிவாக்கப் பணிகள் குறித்த செய்திகளை உள்ளடக்கியிருப்பதாகக் கூறினார். பல்கலைக்கழக முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் சுயவிபரக் குறிப்புகள் அடங்கிய இணையதளதகவல் கருவூலத்தையும் வெளியிட்டார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே.மீனா,அதிநவீன முறையில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகவேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்துப் பேசுகையில், இவ்விதவேலைவாய்ப்பு முயற்சிகள் பல்கலைக்கழகம் மற்றும் தொழிற்துறை நல்லுறவை வளர்க்கும் கருவியாகும் என்று கூறினார். தமிழகத்தில் அழகப்பாபல்கலைக்கழகமே அரசுப் பல்கலைக் கழங்களின் முன்னோடியாக இத்தகு வேலைவாய்ப்பு மலரைக் வெளியிட்டிருப்பதைப் பாராட்டினார். மாணவர்கள் மென்திறன்களை அவசியம் வளர்த்துக் கொண்டு வகுப்பறைக்கு அப்பாற்பட்ட பலபொது அறிவுசார் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமேசான் நிறுவனத்தின் பொறியியல் இயக்குநர் திரு.மணிகண்டன் தங்கரெத்தினம் தனது முக்கிய உரையில், தற்காலத்தின் புதிய தொழில் நுட்பமும், கண்டுபிடிப்புகளும் பலவேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.  வாரா நிறுவனத்தின் முக்கியமகிழ்ச்சி அதிகாரி திரு.வெங்கடே~; பாலசுப்பிரமணியன் மற்றும் திரு.டி.கிரிதர்,பங்குதாரர், கேலிபர் கனெக்சன்ஸ், சென்னை, பேசுகையில்; மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

எம்ப்ளாய பிலிட்டி பிரிட்ஜ் நிறுவனத்தின் முக்கிய செயல் அதிகாரி திரு.அம்பலவாணன் ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வேலைவாய்ப்பு குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே. உதயசூரியன் வரவேற்றார்.

இந்த இருநாள் பெருமுகாமில் அழகப்பாபல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளின் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இம்முகாமில் பிரபலமான 12 நிறுவனங்கள் 600-க்கும் மேற்பட்ட பணிவாய்ப்புகளை வழங்குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago