Idhayam Matrimony

தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான்: த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Sengottaiyan-2026-01-25

சென்னை, தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தி விஜய்தான் என்றும், த.வெ.க.வின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைவரும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எந்தக் கூட்டணியையும் வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் விஜய். திரைப்படத்தில் மட்டும் விஜய் ஹீரோ அல்ல.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் ஹீரோ.

தி.மு.க.காரர், அ.தி.மு.க.காரன் என எந்த நபரிடம் கேட்டாலும், எங்கள் வீட்டில் தளபதிக்குத்தான் ஓட்டு என்கிறார்கள். பல தலைவர்களை நான் பார்த்திருக்கிருக்கிறேன். விஜய் வருகைக்கு பிறகு எல்லா கட்சித்தலைவர்களும் ஆடிப்போய் இருக்கிறார்கள். நமக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளது. இனி போலீஸ்காரர்கள் விசில் வைத்திருக்கக்கூடாது எனக்கூறுவார்கள். பேருந்தில் கண்டக்டர்கள் இனி விசில் அடிக்கக்கூடாது என்றும் கூறுவார்கள்.

விஜய்யின் ஆற்றல், சிந்தனை, தொலைநோக்கு பார்வையை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யோடு இணைந்தபின் நான் எங்கு சென்றாலும் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் ஓடி வந்து என்னுடன் செல்பி எடுக்கின்றனர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக்கொண்டிருப்பவர் காதுகளில் விசில் அடித்தால், அவர் தடுமாறி விடுவார். பேருந்து நிலையத்தில் உள்ள முதியவர் முன்பு விசில் அடித்தால் அவர் தடுமாறி விடுவார். எனவே விசில் அடிப்பதில் கவனம் தேவை.

நீங்கள் கவலைப்பட தேவையில்லை. எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது. தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய ஒரே தளபதி விஜய். அவர் முதல்-அமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து