எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. 2026-2027 க்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2026-2027 க்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள 9-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தொடரை சுமூகமக நடத்துவதற்காக நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்தக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற இணைப்பு கட்டிடத்தின் பிரதான கமிட்டி அறையில் கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக அனைத்துக்கட்சியினரை அழைத்து பேசுவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் எழுப்பப்பட உள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரெளவுபதி முர்மு பேசுகிறார். ஜனாதிபதி உரையில் அரசின் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்த பேச்சுக்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்காக பிப்ரவரி 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் லோக்சபாவில் அலுவல் கூட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டதொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் கூட்டத்தொடர் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


