மளையாங்குளம் பகுதியில் இளம் பெண் மர்ம சாவு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      சென்னை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா மளையாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி திருநாவுக்கரசு இவரது மகள் பவித்ரா(20) மாங்கால் கூட்டுரோடில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பெற்றோர்கள்

 இவருக்கும் இதேப் பகுதியை சேர்ந்த லெனின் என்ற வாலிபருக்கும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லெனினின் வீட்டில் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் மனமுடைந்த பவித்ரா நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வீட்டிலிருந்த பவித்ரா வெளியே சென்றார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.


இரவு முழுவதும் பெற்றோர்கள் தேடி பார்த்தும் பவித்ரா கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மலையாங்குளம் அருகே உள்ள ஓடை பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த உத்தரமேரூர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தற்கொலையா அல்லது கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: