ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திரளும் நட்சத்திர பேச்சாளர்கள்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      தமிழகம்
ttv-dinakaran 2017 02 25

சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகர் செந்தில் உள்ளிட்ட நடிகர்கள் படை களம் இறங்குகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது இந்த தேர்தலில் அதிமுக துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அவருக்கு இந்திய குடியரசு கட்சி பொதுசெயலாளர் செ.கு.தமிழரசன், பசும்பொன் மக்கள் கழகத்தலைவர் இசக்கி முத்து, புரட்சி பாரதம் தலைவர் ஜெகன் மூர்த்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகர்கள் செந்தில், சரவணன், சிங்கமுத்து மற்றும் நடிகை கலா ஆகியோர் களம் இறங்குகின்றனர். இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு.,

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் வெற்றிக்கான தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுக்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு நேற்று தலைமைக் கழகத்தில் அதிமுக நட்சத்திரப் பேச்சாளர்களுடன் தேர்தல்பிரச்சாரப் பணிகள் குறித்தும், சுற்றுப் பயண அட்டவணை குறித்தும் ஆலோசனை நடத்தியது. அதிமுக செய்தி தொடர்புக்குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க மகளிர் அணி துணைச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி, திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம், நடிகர் சரவணன், திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், நடிகர் குண்டு கல்யாணம், அனிதா குப்புசாமி நடிகர்கள் செந்தில், விக்னேஷ், சிங்கமுத்து, அஜய்ரத்தினம், நடிகை மற்றும் பாடகி டி.கே.கலா ஆகியோர் இந்த பிரசார பயணத்தில் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: