முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையதள வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் எம்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி மாவட்டம் புனித.மரியன்னை கல்லூரியில் தமிழ்நாடு அரசு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு (ஃபெட்காட்) இணைந்து நடத்தும் இணையதள வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாணவ, மாணவியர்களிடம் கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்ததாவது:வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. இந்தியாவில் 35 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். இந்தியா வல்லரசாவது உங்கள் கையில் தான் உள்ளது. முன்னோர் காலத்தில் இளைஞர்கள் அதிகம் கொண்டிருந்த ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் தற்போது முதியோர்கள் தான் அதிகமான உள்ளனர். இந்த நாடுகளை பின்னுக்குத்தள்ளி உலகிலேயே இளைஞர்களை அதிக அளவில் தன்னகத்தே கொண்டுள்ளது நமது நாடு. இளையதள வர்த்தகம் தொடர்பாக இளைஞர்கள் அதிக அளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்தினால் போதும். அது நமது குடும்பத்தில் உள்ள அனைவரையும் எளிதில் சென்றடையும். நமது நாட்டில் சமுதாய திட்டங்கள் பெண்களை முன்னிலைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கல்விக்கு உலகிலேயே இந்தியாவே முன்னோடி ஆகும். ஆசியா கண்டத்திலேயே இந்தியாவில்தான் பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தரப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் சாதி, மதம் கடந்து வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து மக்களையும் இணைக்கும் திட்டம் பொது விநியோகத் திட்டமாகும். பணமில்லா பணவர்த்தனையை நமது தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தது. இது போன்ற திட்டங்கள் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. தற்போது நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டை இல்லாமல் கூட விலையில்லா அரிசி வாங்கலாம் என்ற திட்டம் இதற்கு உதாரணம். மாணவ, மாணவியர்கள் சில வியாபாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது வியாபாரிகளிடம் ரூ.125 மதிப்புள்ள ஒரு பொருள் இணையதள வர்த்தகத்தில் ரூ.85 க்கு கிடைக்கிறது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் 30 முதல் 35 சதவீதம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது. இளைஞர்கள் டெபிட்கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைத்துக் கொண்டு பிம் பேடிம் (Pயலவஅ) போன்றவற்றின் மூலம் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு பணபரிவர்த்தனைகளை தொடங்கலாம். இதனால் நமது வங்கி கணக்கு விபரம் மற்றவர்களுக்கு வெளியே தெரியாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். விளம்பரங்கள் மூலம் மக்களை தூண்டிவிட்டு ஏமாற்றுபவர்களை நம்பவேண்டாம் என்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.வீரப்பன் சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப். மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஃபெட்காட் சேர்மன் வெங்கடாசலம், தனிவட்டாட்சியர் வெங்கடாசலம், புனித.மரியன்னை கல்லூரி முதல்வர் சகோதரி.ரோஸ்லின்மேரி உட்பட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்