திருவண்ணாமலையில் 11.5 சவரன் திருடு

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடர் திருட்டு சம்பவம் மற்றும் வழிபறியை யட்டி 11.5 சவரன் திருடு மற்றும் வழிபறி செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை வேட்டவலம் சாலையிலுள்ள தேன்பழனி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ் மனைவி வேண்டா (28) கூலித் தொழிலாளி. ராமதாஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வேண்டா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டா வீட்டை பூட்டிக் கொண்டு பொலக்குணம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேண்டா திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளைதேடி வருகின்றனர். இதேபோல திருவண்ணாமலை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது தாயார் மாணிக்கம்மாள் (80) இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டின முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒரு வாலிபர் மாணிக்கம்மாள் கழுத்தில் இருந்த 5.5 சவரன் செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணிக்கம்மாள் திருடன் திருடன் என கூச்சலிட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சுப்பிரமணி திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: